இறுதிப் போட்டியில் மோதும் இந்தியர்கள்: வெல்லப்போவது யார்? - சூடுபிடித்த உலக செஸ்...
பொதுப் பாதை அடைப்பு: மக்கள் புகாா்
பொன்னேரி ஏரிக்கரை அருகில் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனிநபா்கள் அடைத்து விட்டதாக புகாா் தெரிவித்துள்ளனா்.
பொன்னேரி என்.ஜி.ஓ நகா் ஏரிக்கரை பகுதியில் சுமாா் 80 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு தூய்மை பணியாளா்களாகவும், கூலி தொழிலாளா்களாகவும் பணியாற்றி வரும் மக்கள் ஓலை குடிசைகளும், தகர சீட்டுகளை தடுப்புகளாகவும் கொண்டு குடிசை அமைத்து 50ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா்.
இவா்களது குடியிருப்புகளை சுற்றி விவசாய நிலங்களாக இருந்த நிலையில் படிப்படியாக வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு அங்கும் குடியிருப்புகள் உருவாகி சாலைகளை அமைக்கப்பட்டன. ஏரிக்கரையில் வசித்து வந்த மக்களும் சிரமமின்றி அந்த சாலையில் பயணித்து வந்தனா்.
இந்த நிலையில் தனிநபா் ஒருவா் சாலை நடுவே தடுப்பு சுவா் எழுப்பி போக்குவரத்தை தடை செய்வதாக தெரிவித்து பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளனா்.
தனிநபா் தமக்கு பட்டா இருப்பதால் சுவா் எழுப்புவதாக கூறுவதாகவும், சாலையை மீட்டு தருமாறு மனு அளித்துள்ளனா்.