செய்திகள் :

Kerala: மீண்டும் சர்ச்சை.. மறைந்த தலைவர்கள் குறித்து நடிகர் விநாயகன் பதிவு - என்ன சொல்கிறார்?

post image

கேளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன் தனது செயல்பாடுகள் மூலமும், கருத்துகள் தெரிவிப்பதன் மூலமும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

தனது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்து சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். அதற்கு முன்பு, முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மரணமடைந்த சமயத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில், "யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். என்னுடைய அப்பாவும் இறந்துவிட்டார். உங்களுடைய அப்பாவும் இறந்துவிட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு மூன்று நாள் விடுமுறை விடுகின்றனர். அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், நான் சொல்ல மாட்டேன்" என கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோஷமிட்ட விநாயகன்

இந்த நிலையில் சி.பி.எம் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்பு உடை அணிந்து 'இங்குலாப் சிந்தபாத்' என கோஷமிடும் வீடியோ வைரலானது.

உம்மன் சாண்டி மறைவை மட்டும் விமர்சித்ததாக விநாயகனை காங்கிரஸ் கட்சியினர் கண்டித்து கருத்துகளை வெளியிட்டனர்.

விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

நடிகர் விநாயகன்

அதில், "என் தந்தையும் இறந்துவிட்டார், சகாவு வி.எஸ்.அச்சுதானந்தனும் இறந்துவிட்டார். காந்தியும் இறந்துவிட்டார், நேருவும் இறந்துவிட்டார், இந்திராவும் இறந்துவிட்டார், ராஜிவ் காந்தியும் இறந்துவிட்டார், கருணாகரனும் இறந்துவிட்டார். ஹைபி ஈடனின் தந்தை ஜார்ஜ் ஈடனும் இறந்துவிட்டார். உங்கள் தாயின் நாயர் சாண்டி என்றால் அவரும் இறந்துவிட்டார். இறந்துவிட்டனர், இறந்துவிட்டனர்..." என பதிவிட்டதுடன் வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். நடிகர் விநாயகனின் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன?

எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில்தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில... மேலும் பார்க்க

``வெப்பமடிக்கும் அரசியல் சூழலில், பிரதமர் வெளிநாடுகளுக்கு பறக்கிறார்..'' - தமிமுன் அன்சாரி

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்திற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் அவரின் வெளிநாட்டு பயணம் குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்மு.தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் இனிப்புக்கு ஸ்டீவ்யா பொடியை சேர்க்கலாமா? பாதிப்புகள் வராதா?

Doctor Vikatan: சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா (Stevia) பவுடர் சேர்த்துக்கொள்ளச்சொல்கிறார்களே... அது என்ன... அதைச் சேர்த்துக்கொண்டால்சர்க்கரையால் வரும் பாதிப்புகள் வராதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர... மேலும் பார்க்க

Kerala: வழி நெடுக மக்கள், 22 மணிநேர இறுதி ஊர்வலம்; அரசு மரியாதையுடன் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள மாநில முன்னாள் முதல்வரும், சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 21-ம் தேதி காலமானார். அவரது உடல் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்... மேலும் பார்க்க

Bihar SIR: ``தேர்தல் ஆணையத்துக்கு நடைமுறை அறிவே இல்லை..'' - JDU MP கடும் தாக்கு

பீகாரில் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் `ஸ்பெஷல் இன்டன்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.2003-ம் ஆண்ட... மேலும் பார்க்க

``அவர்களின் விளையாட்டைப் புரிந்து கொண்டோம்" -52 லட்ச வாக்காளர் பெயர் நீக்கம் குறித்து ராகுல் காந்தி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பீகாரில் நடந்துவரும் சிறப்பு வாக்காளர் பெயர் திருத்தப் பட்டியலுக்கு எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்... மேலும் பார்க்க