செய்திகள் :

``வெப்பமடிக்கும் அரசியல் சூழலில், பிரதமர் வெளிநாடுகளுக்கு பறக்கிறார்..'' - தமிமுன் அன்சாரி

post image

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்திற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் அவரின் வெளிநாட்டு பயணம் குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்  பயணங்களுக்கு செல்வது தவறில்லை. ஆனால் நாடாளுமன்றம்  நடக்கும்போதும் அவர் வெளிநாடு செல்வதுதான் பிழையான அரசியலாகும்.

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

ஏனெனில் நாடாளுமன்றம் என்பது மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் கேள்விகளும், விவாதங்களும் நிகழும் அரசியல் மன்றமாகும்.

அதனை தவிர்ப்பதோ, அலட்சியப்படுத்துவதோ ஜனநாயகத்தை சிறுமைப்படுத்துவதாகும்.

* ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த சர்ச்சைகள்

* பீஹாரில் வாக்குகள் களவாடப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் 

* துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரின் திடீர் ராஜினாமா குறித்த ஐயங்கள்

* நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் குவிந்திருந்தது குறித்த கேள்விகள் 

என வெப்பமடிக்கும் அரசியல் சூழலில், பிரதமர் வெளிநாடுகளுக்கு பறக்கிறார். இது எதிர்கட்சிகளுக்கு அஞ்சி தப்பி ஓடுவதாகவே  கருதப்படும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Kerala: மீண்டும் சர்ச்சை.. மறைந்த தலைவர்கள் குறித்து நடிகர் விநாயகன் பதிவு - என்ன சொல்கிறார்?

கேளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன் தனது செயல்பாடுகள் மூலமும், கருத்துகள் தெரிவிப்பதன் மூலமும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தனது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்து சமீபத்தில் சர்ச்ச... மேலும் பார்க்க

Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன?

எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில்தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் இனிப்புக்கு ஸ்டீவ்யா பொடியை சேர்க்கலாமா? பாதிப்புகள் வராதா?

Doctor Vikatan: சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா (Stevia) பவுடர் சேர்த்துக்கொள்ளச்சொல்கிறார்களே... அது என்ன... அதைச் சேர்த்துக்கொண்டால்சர்க்கரையால் வரும் பாதிப்புகள் வராதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர... மேலும் பார்க்க

Kerala: வழி நெடுக மக்கள், 22 மணிநேர இறுதி ஊர்வலம்; அரசு மரியாதையுடன் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள மாநில முன்னாள் முதல்வரும், சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 21-ம் தேதி காலமானார். அவரது உடல் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்... மேலும் பார்க்க

Bihar SIR: ``தேர்தல் ஆணையத்துக்கு நடைமுறை அறிவே இல்லை..'' - JDU MP கடும் தாக்கு

பீகாரில் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் `ஸ்பெஷல் இன்டன்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.2003-ம் ஆண்ட... மேலும் பார்க்க

``அவர்களின் விளையாட்டைப் புரிந்து கொண்டோம்" -52 லட்ச வாக்காளர் பெயர் நீக்கம் குறித்து ராகுல் காந்தி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பீகாரில் நடந்துவரும் சிறப்பு வாக்காளர் பெயர் திருத்தப் பட்டியலுக்கு எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்... மேலும் பார்க்க