சாதிவாரி கணக்கெடுப்பு: ``ராகுல் காந்திபோல ஸ்டாலின் தவறை உணர்வாரா?'' - அன்புமணி க...
Today Roundup: மோடி தமிழ்நாடு வருகை டு சேரனின் ராமதாஸ் பயோபிக் | Headlines
இன்றைய நாளின் (ஜூலை 25) முக்கியச் செய்திகள்!
*முதல்வர் மு.க.ஸ்டாலின்: பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (BiharSIR) கைவிட வேண்டும். முழுவீச்சில் தமிழ்நாடு இதற்கு எதிராகப் போராடும். (முழுவிவரம்)
*பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை: நாளை, ஜூலை 26 - தூத்துக்குடி விமான நிலைய புதுப்பிக்கப்பட்ட புதிய முனையம் திறப்பு விழா, மறுநாள், ஜூலை 27ம் தேதி கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். (முழுவிவரம்)
*மணிப்பூர்: ‘குக்கி’ பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத ‘மைதேயி’ சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை இயல்பு நிலைக்குத் திரும்பாததால், அங்கு அடுத்த 6 மாத காலத்திற்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.
*ராஜஸ்தான்: பள்ளிக்கட்டிடம் இடிந்து 4 குழந்தைகள் பலி; 17 குழந்தைகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (முழுவிவரம் )
*FIDE: 'ஃபிடே மகளிர் உலகக் கோப்பை' செஸ் தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 26, 27 தேதிகளில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் மோதும் திவ்யா தேஷ்முக் VS கோனேரு ஹம்பி இருவரும் இந்தியர்கள். இதில் யார் வெற்றிபெற்றாலும் இந்தியா வெற்றிப்பெற்றதாகவே கருதப்படும். (முழுவிவரம்)
*மான்செஸ்டர்: இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார். முதலிடத்தில் சச்சின் இருக்கிறார்.
*பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை 'அய்யா' எனும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. நடிகர் ஆரி ராமாதஸாக நடிக்கிறார். அதனை சேரன் இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், போஸ்டரும் ராமதாஸின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. (முழுவிவரம் )
*இன்று முதல் 100 நாள் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி ராமதாஸ். ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றவும், திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவே இந்த நடைபயணம் என அன்புமணி பேசியிருக்கிறார்.

*இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். (முழுவிவரம்)
* அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தியா மற்றும் சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதைவிட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குங்கள் அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் தேசிய உணர்வுடன் வெளிநாடுகளில் பணியாளர்களை நியமிப்பதை கைவிட வேண்டும்" என்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (முழுவிவரம்).
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs