Kamal Haasan: ``காந்தி, அம்பேத்கர், பெரியாரின் எண்ணங்கள் என் நரம்புகளில் ஓடுகிறது. ஆனால்..!" - கமல்
இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, தற்போது மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றிருக்கிறார்.
மாநிலங்களவையில் பதவியேற்றது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கமல், "இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களை முன்நிறுத்தி, அவர்களின் குரலாக ஒலிப்பதே மாநிலங்களவையில் என் முதன்மையான கடமை.
இன்று ராஜ்ய சபாவில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள நான், பணிவுடனும், மனசாட்சியுடனும் என் கடமையை செவ்வனே செய்வேன். இந்திய அரசியல் அமைப்பைச் சட்டத்தின் மீது சடங்கிற்காக சத்தியம் செய்து பதவியேற்கவில்லை. அதன் ஆன்மாவை நேர்மையுடனும், துணிச்சலுடனும், மனசாட்சியுடனும் பின்பற்றி செயல்படுவேன்.
இது எனக்கான மகிழ்ச்சியானத் தருணம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் என் மகிழ்ச்சியையும், நன்றியையும் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன்
மகா கவிஞர்களை, புரட்சியாளர்களை, சமூக சீர்திருத்தவாதிகளை, சிந்தையாளர்களை எல்லாவற்றிருக்கும் மேலாக அறம், கண்ணியம், சுயமாரியாதை மிக்கவர்களை உருவாக்கிய தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களில் நானும் ஒருவன். என்னை வளர்த்தெடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்காக குரல் கொடுத்து, ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
காந்தி, அம்பேத்கர், பெரியார்
சுதந்திரம் வாழ வேண்டும் என்று எனக்குள் சுதந்திர எண்ணைத்தை ஊட்டி வளர்த்த சுதந்திரப் போராட்ட வீரரான என் தந்தைக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்தை அர்ப்பணிக்கிறேன் . அவருடைய ரத்தம் மட்டுமல்ல, அவரது உயரிய எண்ணங்களும், கொள்கைகளும் காந்திஜியின் கனவுகளும், அம்பேத்கரின் பேரறிவும், பெரியாரின் உறுதியும் என் நரம்புகளில் ரத்தித்தில் நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
பார்லிமென்ட்டில் வெறுமனே விமர்சனங்களை மட்டும் முன்வைக்க நான் வரவில்லை. நாட்டின் வளர்ச்சியில் என் பங்களிப்பைக் கொடுக்கவும் வந்திருக்கிறேன்.
இதுதான் என் கொள்கை
இந்தியா பன்முகத்தன்மைக் கொண்டது. இங்கு எல்லாவிதமான கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. இந்தியாவின் ஓரணியின் பேரணி இருக்கக் கூடாது. ஒற்றுமையின் பேரணி தான் இருக்க வேண்டும்.
காந்தியின் அகிம்சை, அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம், நேருவின் பன்மைத்துவம், பட்டேலின் நடைமுறைவாதம், பெரியாரின் பகுத்தறிவு என எல்லோர் கொள்கைகளும் இந்தியா எனும் ஒரே வானத்தின் கீழ்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒன்றிணைக்கும் இதயமாக இருப்பது 'மய்யம்' எனும் நடுநிலையான கொள்கைதான். அதுதான் இன்றைய இந்தியாவிற்குத் தேவை. 'மக்கள் நீதி மய்யம்' ஏற்றுக் கொண்டுள்ள அந்த மய்யத்தின் அடிப்படையில் நடுநிலையாக இருந்து என் அரசியல் கடமையைச் செய்யவிருக்கிறேன்.
அதிகமாக இருக்கும் இளைஞர்களைக் கொண்டது இந்தியா. தேசத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருக்கும் இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உறுதி செய்வதே நம் நாட்டின் எதிர்காலமும், சக்தியும் அடங்கியிருக்கிறது.
டெல்லியில் தமிழ்நாட்டு மக்களின் குரலாக உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் ஒலிப்பேன். என்னோடு எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி. என்னை நம்பியவர்களை நான் என்றும் கைவிட்டுவிட மாட்டேன்.
இந்திய சட்டத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்தும், என் மக்களின் மீதும் அன்பு வைத்தும் எனது இந்த புதியப் பயணத்தைத் தொடங்குகிறேன். இது வெறும் ஆரம்பம்தான். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டிருக்கிறார் கமல்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs