செய்திகள் :

Chanda kochhar: `லஞ்சம் வாங்கியது உறுதி' - ICICI வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஊழல் அம்பலம்

post image

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் (SAFEMA) கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

சந்தா கோச்சார்
சந்தா கோச்சார்

இதுகுறித்து தீர்ப்பாயம் வெளியிட்டிருக்கும் உத்தரவில், ``அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின்படி சந்தா கோச்சார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச்சார் மூலம் வீடியோகான் குழுமத்திலிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது நிரூபணமாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் தீபக் கோச்சாரின் என்.ஆர்.பி.எல் நிறுவனத்துக்கு மடைமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

வீடியோ​கான் நிறு​வனத்​துக்கு விதி​களை மீறி ரூ.300 கோடி கடன் வழங்க அனு​மதி அளித்​ததற்​காக சந்தா கோச்​சா​ருக்கு அவரது கணவர் மூலம் லஞ்​ச பணத்தை வீடியோ​கான் குழு​மம் வழங்​கி​யுள்​ளது. இதற்​கான ஆதா​ரங்​கள் பி.எம்​.எல்.ஏ சட்ட பிரிவு 50-ன் கீழ் நம்​பக்​கூடிய வகை​யில் கிடைத்​துள்​ளது. இதன் மூலம் சந்தா கோச்​சா​ருக்கு தொடர்​புடைய ரூ.74 கோடி சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளதை மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யம் உறுதி செய்கிறது.

சந்தா கோச்சார்
சந்தா கோச்சார்

ஐசிஐசிஐ வங்​கி, கடன் வழங்​கிய மறு​நாளே வீடியோ​கான் குழு​மத்​தின் எஸ்.​இ.பி.எல் நிறு​வனம் மூலம் ரூ.64 கோடியை தீபக் கோச்​சா​ரின் நிறு​வனத்​துக்கு மாற்​றி​யுள்​ளது. எனவே, வீடியோ​கான் குழு​மத்​துக்கு கடன் வழங்க தனிப்​பட்ட முறை​யில் ஆதர​வாக செயல்​பட்ட சந்தா கோச்​சார் குற்​ற​வாளி என்​பது உறுதி செய்யப்படுகிறது." எனக் குறிப்பிட்டுள்ளது.

``ரூ.25 லட்சம் மோசடி'' - தயாரிப்பாளரை செருப்பால் அடித்த பாலிவுட் நடிகை.. என்ன நடந்தது?

பாலிவுட் நடிகை ருச்சி குஜார், `தயாரிப்பாளர் கரண் சிங் செளகான் என்பவர் ரூ.24 லட்சம் மோசடி செய்துவிட்டதாக' போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து மும்பை ஓசிவாரா போலீஸார் தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு... மேலும் பார்க்க

உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல மாட்டிக்காதீங்க!

'கையில காசு இருக்கு, என் அக்கவுன்ட்ல காசு இல்லை... நான் உனக்குத் தந்துடுறேன்... உன் அக்கவுன்டல இருந்து நான் சொல்ற அக்கவுன்டுக்கு அனுப்புறியா?’, ‘உன்னோட அக்கவுன்டுக்குப் பணம் அனுப்புறேன்... ஃபிளைட் டிக... மேலும் பார்க்க

கரூர்: `பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ.5,000' -லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி - வேல்முருகன் தாம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா என்பவரின் பிறப்புச் சான்றிதழில் பெளத்ரா என்று தவறுதலாக இருப்பதற்கு பெயர் பிழை திருத்த... மேலும் பார்க்க

Marakkaar Biryani: கிளைகள் தருவதாக 239 பேரிடம் ரூ.25 கோடி வசூல்.. மோசடி புகாரில் உரிமையாளர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் விரிவாக்கம் மகிழம்பூ நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் மகன் கங்காதரன் என்பவர் ட்ரூல் டோர் (கனவு காணுங்கள்) என்ற நிறுவனத்தின் கீழ் மரக்கார் பிரியாணி கடை ம... மேலும் பார்க்க

காலைச் சுற்றிய பாம்பாக கடன்கள், கண்டுகொள்ளாத அரசு / அமைப்புகள், இனியாவது விரைவான தீர்வு கிடைக்குமா?

இந்தியா, டிஜிட்டல் மயமாக்கலில் மிக வேகமாக முன்னேறிவருகிறது. ஆனால், தனிநபர்களின் தரவுகளைப் பாதுகாத்தல், தரவுகளைச் சரிபார்த்தல், போலி தரவுகளை அடையாளம் கண்டு நீக்குதல் போன்றவற்றில் இன்னமும் பின்தங்கியே இ... மேலும் பார்க்க

AI உதவியால் ரூ.10 லட்சம் கடனை முடித்த பெண் - நீங்களும் இப்படிச் செய்யலாம்!

ஒவ்வொரு நபரும் நிதிச் சுதந்திரத்தை நோக்கிச் செல்வதற்குத் தடையாக இருப்பது கடன்கள்தான். மாதம் தோறும் பணத்தைச் சேமிக்கக்கூட விடாமல் கடன்கள் தடுக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியக்... மேலும் பார்க்க