செய்திகள் :

கரூர்: `பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ.5,000' -லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி - வேல்முருகன் தாம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா என்பவரின் பிறப்புச் சான்றிதழில் பெளத்ரா என்று தவறுதலாக இருப்பதற்கு பெயர் பிழை திருத்தம் செய்ய கடந்தாண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு பெயர் திருத்தம் செய்யலாம் என கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அப்போது தாசில்தாராக இருந்தவர் பெயர் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால், இதனை முறையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமல் காலம் தாழ்த்தி அலைகழித்து வந்ததுடன் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் அதற்கு ரூ. 5,000 லஞ்சப்பணம் கேட்டுள்ளார்.

இதனால், விரக்தியடைந்த ரேவதி இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரேவதியிடம் ரசாயனம் பவுடர் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் பணத்தினை அளித்து, அதனை கடவூர் தாசில்தார் சௌந்தரவள்ளியிடம் தருமாறு கூறியுள்ளனர்.

லஞ்சம் வாங்கிய தாசில்தார் சௌந்தரவள்ளி

அதனைத்தொடர்ந்து, ரேவதி தாசில்தார் சௌந்தரவள்ளியிடம் பணம் அளிக்கும் போது மறைந்திருந்த கரூர் லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி ஆம்ரோஸ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, சாமிநாதன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்டு தாசில்தார் அலுவலக அறையினை சோதனையிட்டு அவரை கைது செய்தனர். பின்னர், அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் திருச்சியில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.

பெயர் பிழை திருத்தும் செய்வதற்காக பெண்ணிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்டு தாசில்தார் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chanda kochhar: `லஞ்சம் வாங்கியது உறுதி' - ICICI வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஊழல் அம்பலம்

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுத... மேலும் பார்க்க

உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல மாட்டிக்காதீங்க!

'கையில காசு இருக்கு, என் அக்கவுன்ட்ல காசு இல்லை... நான் உனக்குத் தந்துடுறேன்... உன் அக்கவுன்டல இருந்து நான் சொல்ற அக்கவுன்டுக்கு அனுப்புறியா?’, ‘உன்னோட அக்கவுன்டுக்குப் பணம் அனுப்புறேன்... ஃபிளைட் டிக... மேலும் பார்க்க

Marakkaar Biryani: கிளைகள் தருவதாக 239 பேரிடம் ரூ.25 கோடி வசூல்.. மோசடி புகாரில் உரிமையாளர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் விரிவாக்கம் மகிழம்பூ நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் மகன் கங்காதரன் என்பவர் ட்ரூல் டோர் (கனவு காணுங்கள்) என்ற நிறுவனத்தின் கீழ் மரக்கார் பிரியாணி கடை ம... மேலும் பார்க்க

காலைச் சுற்றிய பாம்பாக கடன்கள், கண்டுகொள்ளாத அரசு / அமைப்புகள், இனியாவது விரைவான தீர்வு கிடைக்குமா?

இந்தியா, டிஜிட்டல் மயமாக்கலில் மிக வேகமாக முன்னேறிவருகிறது. ஆனால், தனிநபர்களின் தரவுகளைப் பாதுகாத்தல், தரவுகளைச் சரிபார்த்தல், போலி தரவுகளை அடையாளம் கண்டு நீக்குதல் போன்றவற்றில் இன்னமும் பின்தங்கியே இ... மேலும் பார்க்க

AI உதவியால் ரூ.10 லட்சம் கடனை முடித்த பெண் - நீங்களும் இப்படிச் செய்யலாம்!

ஒவ்வொரு நபரும் நிதிச் சுதந்திரத்தை நோக்கிச் செல்வதற்குத் தடையாக இருப்பது கடன்கள்தான். மாதம் தோறும் பணத்தைச் சேமிக்கக்கூட விடாமல் கடன்கள் தடுக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியக்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி: வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு; மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மீது புகார்

மாநகராட்சிக்கு ரூ 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்தி வரி விதிப்பில் மோசடி செய்த புகாரில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... மேலும் பார்க்க