செய்திகள் :

காலைச் சுற்றிய பாம்பாக கடன்கள், கண்டுகொள்ளாத அரசு / அமைப்புகள், இனியாவது விரைவான தீர்வு கிடைக்குமா?

post image

இந்தியா, டிஜிட்டல் மயமாக்கலில் மிக வேகமாக முன்னேறிவருகிறது. ஆனால், தனிநபர்களின் தரவுகளைப் பாதுகாத்தல், தரவுகளைச் சரிபார்த்தல், போலி தரவுகளை அடையாளம் கண்டு நீக்குதல் போன்றவற்றில் இன்னமும் பின்தங்கியே இருக்கிறது என்பது வேதனையே! இதனால், பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்திக்கின்றனர். குறிப்பாக, கடன் விஷயத்தில் பிரச்னைகளுக்கு அளவே இல்லை.

சம்பந்தப்பட்டவருக்குத் தெரியாமலேயே அவர் பெயரில் கடனுக்கு விண்ணப் பிக்கப்படுவது, கடனைக் கட்டி முடித்த பிறகும் கடன் முடிக்கப்படாமல் இருப்பது, கிரெடிட் வரலாறுகளில் குளறுபடிகள், கிரெடிட் ஸ்கோர் பாதிப்புகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதனால், தகுதியானவர்களுக்குக் கடன் கிடைப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. கடன் வாங்காதவர்கள், தங்கள் பெயரில் கடன் இருப்பதாகக் காட்டுவதால் மனஉளைச்சலுக்கு ஆளாவது தனிக்கதை.

இது போன்ற குளறுபடிகளால், தனிநபர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்கம், நிதித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களும்கூட பாதிப்புக்குள்ளாகின்றன. சரியான தரவுகளை ஒருங்கிணைக்கும் பணி மிகவும் சிக்கலானதாகவும், அதிக செலவுள்ளதாகவும் இருப்பதுதான் இதற்கெல்லாம் முக்கிய காரணம். இதுதொடர்பாகத் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டாலும் அசையாமலே இருந்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தற்போது, மெள்ள அசைய ஆரம்பித்துள்ளன.

இதற்காக, ULI என்ற யுனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ், கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இது, நிதித் துறையில் உள்ள தரவுகள் சார்ந்த குளறுபடிகளைச் சரிசெய்து, நிதிச் சேவைகளை எளிமையாகவும், விரை வாகவும் மற்றும் பிழைகள் அற்றதாகவும் மேம்படுத்த உதவும். UPI-க்கு அடுத்து ULI இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பயணத்தில் அடுத்த புரட்சியாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் UPI செய்த புரட்சியைப் போல, கடன் வழங்கும், வசூலிக்கும் செயல்பாடுகளில் ULI புரட்சியை உண்டாக்கும்’ என்று அப்போது பெருமையோடு குறிப்பிட்டார், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்.

அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆன நிலையில், மெள்ள சோம்பல் முறித்து, ‘கடன்தாரர்களுக்கென தனித்துவமான அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் மூலம், சரியான தரவுகளை நிதி நிறுவனங்கள் பெற முடியும். போலி கணக்குகள், தவறான விவரங்கள் மற்றும் கிரெடிட் ஸ்கோர் பாதிப்புகள் உள்ளிட்ட குளறுபடிகளைத் தவிர்க்கவும் முடியும்’ என்று இப்போது கூறியுள்ளது ரிசர்வ் வங்கி.

உண்மைதான். ஆனால், இது போன்ற விஷயங்களில் உடனடியாகச் செயல்பட்டு, விரைவாக நடைமுறைப்படுத்தினால்தானே தனிநபர்கள், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கித் துறை என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை உணர்ந்து, இப்போதாவது இந்தப் பணிகளை ரிசர்வ் வங்கி விரைவுபடுத்தி முடிக்கும் என்று நம்புவோம்!

AI உதவியால் ரூ.10 லட்சம் கடனை முடித்த பெண் - நீங்களும் இப்படிச் செய்யலாம்!

ஒவ்வொரு நபரும் நிதிச் சுதந்திரத்தை நோக்கிச் செல்வதற்குத் தடையாக இருப்பது கடன்கள்தான். மாதம் தோறும் பணத்தைச் சேமிக்கக்கூட விடாமல் கடன்கள் தடுக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியக்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி: வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு; மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மீது புகார்

மாநகராட்சிக்கு ரூ 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்தி வரி விதிப்பில் மோசடி செய்த புகாரில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... மேலும் பார்க்க

Cyber ​​crime: ``டிஜிட்டல் கைது'' - 70 வயது மருத்துவரை மிரட்டி ரூ.3 கோடி பறித்த கும்பல்

இணையத்தள குற்றவாளிகள் நாடு முழுவதும் தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து பல்வேறு வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அதோடு பணமோசடி புகாரை காரணம் காட்டி டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்த... மேலும் பார்க்க

"வைரங்கள், ரூ.10 லட்சம்.." - ஒரு தொலைபேசி அழைப்பில் சிதைந்துபோன பெண்ணின் வாழ்க்கை!

மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் பகுதியில் ஆஷா பணியாளராக புஷ்பலதா என்ற பெண் பணியாற்றி வந்திருக்கிறார். தனது இரண்டு குழந்தைகளை நிர்வகித்தும் கணவரை ஆதரித்தும் வந்துள்ளார் புஷ்பலதா. சிறு சிறு வேலைகளை செய்து ... மேலும் பார்க்க

Google Pay: 112 பேரிடம் கூகுள் பே மூலம் நூதன மோசடி - கோவையை அதிர வைத்த காதல் தம்பதி

கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சக்திவேலின் கடைக்கு ஒரு இளம் தம்பதி சென்றுள்ளனர். தொடர... மேலும் பார்க்க

`ஸ்மார்ட் சிட்டி' பெயரில் 70,000 பேரிடம் ரூ..2700 கோடி வசூல்; அதிர வைத்த மெகா மோசடி..

`வீடு, நிலம், அதிக வட்டி..' ஆசையை தூண்டி மோசடிராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் சுபாஷ், ரன்வீர் சொந்தமாக நெக்சா எவர்கிரீன் என்ற கம்பெனியை தொடங்கி நடத்தி வந்தனர். இதில் தங்களது நிறு... மேலும் பார்க்க