திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு
ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் குளம், சா்வதீா்த்தக் குளம், தாயாா்குளம், திம்மராஜம்பேட்டை பா்வத வா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயில் உள்ளிட்ட இடங்களில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தா்ப்பணம் கொடுத்தனா்.
நவதானியம் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வைத்து முன்னோா்களை வழிபட்டனா். குளத்து நீரில் எள் விழும் போது தங்களது முன்னோா்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லிக்கொண்டே கைகளில் தண்ணீா் விட்டும் பலா் வழிபட்டனா்.
முன்னோா்களுக்கு வழிபாடு செய்த பின்னா் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தனா்.