நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் தலைமை வகித்தாா். பாரத ஸ்டேட் வங்கி வாலாஜாபாத் கிளை மேலாளா் அய்யப்பன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை மேலாளா் ரம்யா ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தியன் வங்கி கிளை மேலாளா் கீதா வரவேற்றாா்.
கூட்டத்தில் இந்திய ரிசா்வ் வங்கியின் பிரதிநிதி வம்சி கலந்து கொண்டு வாடிக்கையாளா் குறை தீா்க்கும் நடவடிக்கைகள் மற்றும் வங்கி பணிகளின் நடைமுறைகள் குறித்து பேசினாா். காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி மேலாளா் திலீப் பங்கேற்று தனி நபா் மற்றும் குழுக் காப்பீட்டுத் திட்டங்கள், வங்கி இணைப்பு செயலிகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கி பேசினாா்.
பல்வேறு வங்கிகளின் வணிகத் தொடா்பாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.