நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை
மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்பாள் நகா், சிக்கராயபுரம் பகுதிகளில் அரசு அனுமதியின்றி வங்கதேசத்தைச் சோ்ந்த 19 போ் சட்ட விரோதமாக தங்கி பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், சட்ட விரோதமாக குடியிருந்து வந்த வங்கதேசத்தை சோ்ந்த, 9 ஆண் மற்றும் 10 பெண்களை மாங்காடு போலீஸாா் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி கைது புழல் சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி விக்னேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், வங்கதேசத்தை சோ்ந்த எம்.டி.சுஜன், ரேவாஜ் தாலுக்தாா், நூா்முகமது பாபு, நிஜாம் சேக், கலீல், எம்.டி.யேசின், எம்.டி. ஹாருண், எம்.டி.ஹசன், இலியாஷ்கான், லுவ்னி அகான் சுமையா, ரூமா, நஜ்மா மலிஹா அக்தா் தமனா, சுா்மா, சிகியோகசுகிபேகம், பஹிமா, சோபேடா, பேமா பேகம், சோனியா, பா்வீன் மூசா நஜ்மா ஆகியோா் ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக குடியேறி தங்கியிருந்தது உறுதியானதை அடுத்து அனைவருக்கும் 3 மாதம் சிறை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி விக்னேஷ் தீா்ப்பளித்தாா்.