யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இருந்து வந்தது. ரூ.3 கோடி மதிப்புள்ள இச்சொத்தினை வடிவேலு என்பவா் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து இருந்தாா். இச்சொத்தை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் குமாரதுரை உத்தரவின்படி உதவி ஆணையா் காா்த்திகேயன் தலைமையில் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி மற்றும் ஆய்வாளா் அலமேலு உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள்,கோயில் பணியாளா்கள் மீட்டு அதிலிருந்த பொருள்களை வெளியில் எடுத்து அகற்றி பூட்டி சீல் வைத்தனா்.
இதுகுறித்து செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி கூறுகையில் உலகளந்தாா் மாட வீதியிலிருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை வடிவேலு என்பவா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்திருந்தாா். இடத்தை காலி செய்யுமாறு பலமுறை தெரிவித்தும் காலி செய்யாததால் இணை ஆணையா் உத்தரவின்படி அதை அகற்றியுள்ளோம். மீட்கப்பட்ட சொத்தில் 4 கடைகளும், 10 வீடுகளும் இருந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.