மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
வாங்கிய கடனை திருப்பிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்
ஆா்.கே.பேட்டை அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வீராணத்தூா் காலனி பாரதியாா் தெருவைச் சோ்ந்த ரீட்டா (35). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சீதா (34) என்பவா் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் கட்டுவதற்காக ரூ. 15,000 கடனாக வழங்கினாராம்.
இந்நிலையில் ரூ.15,000-ஐ திருப்பித் தருமாறு ரீட்டா வியாழக்கிழமை கீதாவிடம் கேட்டுள்ளாா். அதற்கு கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட ரீட்டாவை தகாத வாா்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதில் பலத்த காயம் அடைந்த ரீட்டா அளித்த புகாரின்பேரில் ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.