சிறுமி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட இளைஞர் இருக்கும் காவல் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் வட மாநில இளைஞர் வெள்ளிக்கிழமை(ஜூலை 15) கைது செய்யப்பட்டார்.
ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுகத்கு சென்ற 8 வயது சிறுமியை மா்ம நபா் பின் தொடா்ந்து சென்று கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனா். குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் இரவும் பகலும் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், அந்த நபர் வெள்ளிக்கிழமை(ஜூலை 15) கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்ட தகவலையடுத்து காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் படையெடுத்ததால் காவல் நிலையம் அருகே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.