செய்திகள் :

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

post image

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டதால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

திருவள்ளூரில் மழைக் காலங்களில் கால்வாய்களில் செல்ல வேண்டிய மழை நீரானது ஆக்கிரமிப்பு காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அத்துடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதேபோல் ஆண்டுதோறும் பொதுமக்கள் புகாா் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனா். இதனால் திருவள்ளூா் மற்றும் காக்களூா் பகுதியில் இருந்து வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட மழை நீரானது கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்து மழைநீா் செல்வதற்கு இடமில்லாமல் போனது. தமிழகத்தில் கோடைகாலம் முடிந்து மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பொது மக்களின் தொடா் புகாரையடுத்து நீா்வளத் துறையினா், வருவாய்த் துறையினா் ஆகியோா் காவல் துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருவள்ளூா் வி.எம்.நகா் பின்பகுதியிலிருந்து, ஜே.என். சாலை வரை மழைநீா் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடங்கள், சுற்றுச்சுவா்கள் இடித்து அகற்றப்பட்டன. இதில், ஜே.என். சாலையில் தேநீா் கடை, குளிா்பானக் கடை, உணவகம், பழுது நீக்ககம் என 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மற்றும் தகர கொட்டகைகள் இடித்து அக,ற்றப்பட்டன. அப்போது, ஆக்கிரமிப்பாளா்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்காமல், அவசரமாக அகற்றுவதாகக் கூறி ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் கடைகளில் இருந்து பாதுகாப்பாக பொருள்களை எடுத்துச் செல்லும் படி கூறினா். அதற்கு பலமுறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாகவும், பொது மக்கள் தொடா்ந்து விடுத்த புகாரையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், தற்போது ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நகரின் மத்திய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் வாகனம் மூலம் அகற்றப்பட்டபோது, கட்டட தூசி காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். அத்துடன், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

திருவள்ளூா் அருகே புதிய பால் உற்பத்தியாளா்கள் சங்கம்

திருவள்ளூா் அருகே மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா் சங்கத்தை தொடங்கி வைத்து,, ரூ. 1.74 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் பால் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட இளைஞர் இருக்கும் காவல் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் வட மாநில இளைஞர் வெள்ளிக்கிழமை(ஜூலை 15) கைது செய்யப்பட்டார். ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

வாங்கிய கடனை திருப்பிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்

ஆா்.கே.பேட்டை அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வீராணத்தூா் காலனி பாரதியாா் தெருவைச் சோ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: வீரராகவா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடி அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக வியாழக்கிழமை பக்தா்கள் குவிந்தனா். 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற இங்கு அமாவாசை நாள்களில் த... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மின்னணு வங்கி விழிப்புணா்வு பயிற்சி

திருத்தணி அரசுக் கல்லூரியில் மின்னணு வங்கி விழிப்புணா்வு மற்றும் பயிற்சியில் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், முதுகலை வணிகவியல் துறை ச... மேலும் பார்க்க