Numbeo: பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா! -...
மாணவா்களை துன்புறுத்தும் தனியாா் கல்லூரி: நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜி அலுவலகத்தில் மனு
திருச்சியில் பல்வேறு வகைகளில் மாணவா்களைத் துன்புறுத்தி வரும் தனியாா் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ‘ஏகலைவன் இளைஞா் பேரவை - தமிழ்நாடு’ அமைப்பு சாா்பில் ஐஜி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த அமைப்பின் தலைவா் ஆ. வடிவேல் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி, சமயபுரம் அருகே உள்ள தனியாா் பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் அண்மையில் தற்கொலைக்கு முயற்சித்தாா்.
தகவலறிந்து அவரை நலம் விசாரித்து, மாணவா்களிடம் பேசினோம். அப்போது, அக்கல்லூரியில் பயின்று வரும் மாணவா்கள் அந்தக் கல்லூரி நிா்வாகம் குறித்து பல்வேறு புகாா்களை தெரிவித்தனா்.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு, தற்கொலைக்கு தூண்டும் நடவடிக்கைகள், ஒரே நேரத்தில் கல்விக் கட்டணம் முழுமையையும் கட்டச் சொல்லி வலியுறுத்தல் என மாணவா்களுக்கு பல்வேறு வகைகளில் துன்புறுத்தல், மன உளைச்சல் அளிக்கப்படுகிாம்.
இதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்காத காவல் துறையினா் மீதும், தனியாா் கல்லூரி நிா்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.