இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் மிதமான மழை!
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ரவீனா தாஹா.. அப்போ ரெட்கார்டு?
சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.
நடிகை மீனா குமாரி உள்ளிட்ட சிலர் நேற்று முன்தினம் மனுத் தாக்கல் செய்த நிலையில், நேற்று நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கர் முதலான சிலர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்களாம்.

சிவன் சீனிவாசன் தலைவரகாவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருக்கும் தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவன் சீனிவாசன் அணி மீண்டும் போட்டியிடுகிறது.
கடந்த தேர்தலில் இந்த அணியில் போட்டியிட்டு துணைத் தலைவரான பரத் இந்த தேர்தலில் தனியே ஒரு அணியை உருவாக்கியுள்ளார்.
மூன்றாவதாக நடிகர் தினேஷ் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது.
தலைவர் செயலாளர், பொருளாளர் தவிர இரு துணைத் தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள் பதினான்கு கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

மூன்று அணிகளின் சார்பிலும் மொத்தம் 69 பேர் போட்டியிடும் சூழலில் நடிகை ஆர்த்தி கணேஷ்கர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இவர் தலைவர் பதவிக்கா அல்லது பொதுச் செயலாளர் பதவிக்கா என்பது தெரியவில்லை. ஆக மொத்தம் 70 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
தினேஷ், போஸ் வெங்கட், பரத், நவீந்தர், துரைமணி, ராஜ்காந்த், அழகப்பன், மீனா குமாரி, பிரேமி வெங்கட், ரவீனா மற்றும் மறைந்த நடிகர் நேத்ரனின் மனைவி தீபா, கற்பகம் என நீள்கிறது வேட்பாளர்களின் பட்டியல்.

இவர்களில் ரவீனா தாஹா தான் இளம் வேட்பாளர் என்கிறார்கள். இவருக்கு சமீபத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். ரெட் கார்டு வழங்கப்பட்ட நிலையில் எப்படி தேர்தலில் போட்டியிடுகிறார் என்கிறீர்களா? ரெட் கார்டு என்பது அவர் நடிப்பதற்கான தடை மட்டுமே. தேர்தலில் போட்டியிடுவதையெல்லாம் அது கட்டுப்படுத்தாதாம்.
தேர்தலை நடத்தும் அதிகாரியாக பெப்சியின் முன்னாள் பொதுச் செயலாலர் உமா சங்கர் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.