ஏன் இந்த அநீதி? 3 ஆண்டாக அணியில் இருந்தும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு மறுக்கப்படும் வா...
டிராக் டார்க் கண்ட்ரோல் வசதியுடன் ஆர்டிஆர் 310!
அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆர்டிஆர் 310 பைக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட மாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பைக்கின் என்ஜின் 312 சி.சி., 6 கியர், 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதியுடன் 169 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், டிராக் டார்க் கண்ட்ரோல் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பைக் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது அவசர காலத்தில் பிரேக் பிடித்தால், கீழே சறுக்காத வகையில் சக்கரத்தின் சுழற்சியை முற்றிலும் நிறுத்தாமல், வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
ப்ளூடூத் வசதியுடன் 5.5 அங்குல டிஸ்பிளே இருக்கிறது. சக்கரத்தின் அழுத்தத்தை திரையில் கண்காணிக்க முடியும். ப்ளூடூத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பாடலை மாற்றிக் கொள்ளலாம். முகப்பு விளக்கின் வெளிச்சத்தை கண்ட்ரோல் செய்து கொள்ள முடியும்.
இந்த பைக்கின் முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷனை முழுமையாக ஏற்றி இறக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருப்பு, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் ஆர்டிஆர் 310 பைக் சந்தைக்கு வந்துள்ளது. தொடக்க விலை ரூ. 2.4 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.