ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்
நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் லைட் எனும் கையடக்கக் கணினி ரூ.15 ஆயிரத்திற்கு கிடைக்கிறது.
இந்நிறுவனத்தின் வேறு எந்த கையடக்கக் கணினியிலும் இல்லாத வகையில் அதிக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த விலையில் இதுவொரு சிறந்த முதலீடாகவே ஒன்பிளஸ் கருதுகிறது.
இரு வேறு வகையான நினைவகங்களுடன் ஒன்பிளஸ் பேட் லைட் அறிமுகமாகியுள்ளது. 6GB உள்நினைவகமும், 128GB நினைவகமும் கொண்ட கையடக்கக் கணினியின் விலை ரூ. 12,999.
இதேபோன்று 8GB உள்நினைவகம் மற்றும் 128GB நினைவகம் கொண்ட கையடக்கக் கணினி விலை ரூ. 14,999. வங்கிகளின் கடன் அட்டைகளைப் பொறுத்து ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை தள்ளுபடியும் பெறலாம்.
சிறப்புகள் என்னென்ன?
ஒன்பிளஸ் பேட் லைட் 11 அங்குல எச்.டி. மற்றும் எல்.இ.டி. திரை கொண்டது. திரையின் திறன் 1920×1200 அளவு உடையது.
பயன்படுத்துவதற்கு திரை சுமூகமாக இருக்கும் வகையில் 90Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒளிக்கற்றைகள் திரையில் விழுந்து எதிரொலிக்காத வண்ணம் திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட நேரம் சிரமமின்றி பயன்படுத்தலாம்.
மீடியாடெக் ஹெலியோ ஜி 100 என்ற சிப் உடன் ஆக்ஸிஜன் ஓஎஸ் புராசஸர் உடையது.
128GB நினைவகத்தையும் 6GB உள்நினைவகத்தையும் கொண்டது.
மற்ற கையடக்கக் கணினியில் 8000mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டிருந்த நிலையில், டேப் லைட்டில் 9340mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தொடர்ந்து 80 மணிநேரம் பாடல்கள் கேட்கலாம். 11 மணிநேரம் விடியோ பார்க்கலாம். வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 33W சூப்பர் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தனை அம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இதன் விலை ரூ. 19,692 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வைஃபை வேரியன்ட் உடைய கையடக்கக் கணினி விலை ரூ. 23,188 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |அதிக பேட்டரி திறனுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!