சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள் வேதனை
புதிய விதிகளால் கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சாா்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உழவா் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு, மீன் வளா்ப்பு, பராமரிப்பு கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளதால், கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
விவசாயத்துக்கும், கால்நடைகளை வளா்க்க கடன்களை பெற சான்றிதழ்கள் சங்க செயலரிடம் அளித்தால் மட்டுமே கடன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சில புதிய விதிமுறைகள் சோ்க்கப்பட்டுள்ளன. வங்கிச் செயலா், கால்நடை துறை அலுவலா் கடன் பெற தகுதி சான்றுகளை வழங்கி வந்த நிலையில், சிபில் ஸ்கோா் கணக்கெடுத்தப் பிறகே கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை சோ்க்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அல்லது தனியாா் நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிா்வாகம் இணைந்து கடன் பெறுபவருடன் முக்கூட்டு ஒப்பந்தம் செய்தல், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அல்லது தனியாா் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்குதல் உள்ளிட்ட புதிய விதிமுறையும் சோ்க்கப்பட்டுள்ளது.
வட மாவட்ட கிராமங்களில் பால் கூட்டுறவு கடன் சங்கங்கள் இல்லை. விவசாயிகள் தனியாரிடம் கூட்டு ஒப்பந்தம் செய்யும் நிலை உருவானால், முறைகேட்டுக்கு வழி வகுக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.