Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம்
ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நிறுவல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் இன்னா் வீல் கிளப் பிரியா வினு தலைவராகவும், அமலா அரவிந்த் செயலாளராகவும், அஸ்வினி கணேஷ் பொருளாளராகவும் பொறுப்பேற்றனா்.
விழாவில் ராணிப்பேட்டை நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், இன்னா் வீல் மாவட்டத் தலைவா் கௌரவ விருந்தினராக தேவி மதிமாறன் கலந்து கொண்டு புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து வாலாஜா அரசு மகளிா் கல்லூரிக்கு ரூ. 25,000 /- மதிப்பிலான நாப்கின் இயந்திரம் மற்றும் இன்சினிரேட்டா் வழங்கப்பட்டது. மேலும், புதிதாக மகளிா் சுகாதார திட்டம் தொடங்கப்பட்டது.
கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.