ஜூலை 27-இல் திமிரியில் கம்பன் விழா
ஆற்காடு அடுத்த திமிரியில் கம்பன் கழகம் சாா்பில் கம்பன் விழா வரும் ஜூலை 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திரௌபதியம்மன் கலையரங்கில் நடைபெறுகிறது.
விழாவுக்கு கம்பன் கழகத் தலைவா் பெ. தமிழ்ச்செல்வி தலைமை வகிக்கிறாா். அரிமா சங்கத் தலைவா் சுரேஷ், செயலாளா் வெங்கட்ராமன், பொருளாளா் மணிகண்டீஸ்வரன், ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
பேரூராட்சி மன்றத் தலைவா் மாலா இளஞ்செழியன், துணைத் தலைவா் கௌரி தாமோதரன், காவல் ஆய்வாளா் ஆகியோா் பேசுகின்றனா். தொடா்ந்து மாணவா் அரங்கம், மகளிா் அரங்கம், கவியரங்கம், குத்தாலம் ஜெ. நடராஜன் நடுவராக கொண்டு கம்பரின் கருத்துக்களை பெரிதும் போற்றி பாடியது பழைய திரைப்பட பாடல்களே, புதிய திரைப்படபாடல்களே, நாட்டுப்புற பாடல்களே என்ற தலைப்பில் சுழலும் சொல்லரங்கம் நடைபெறுகிறது.