தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
404 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்
ராணிப்பேட்டையில் 404 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 404 பயனாளிகளுக்கு ரூ. 2.39 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ‘நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு’ என்ற ராணிப்பேட்டை மாவட்ட நான்காண்டு சாதனை மலா் கையேடு வெளியீட்டு விழா ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா்.
விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகையில், தமிழக முதல்வா் ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பெண்கள் நலன் சாா்ந்த திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகின்றாா். இதுபோன்ற திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனா் என்றாா்.
நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்குமரன், மாவட்ட சமூக நலன் அலுவலா் பாலசரஸ்வதி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, வருவாய் கோட்டாட்சியா் ராஜராஜன், வட்டாட்சியா் ஆனந்தன், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பயனாளிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.