இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
ஓய்வூதியதாரா்கள் மனித சங்கிலி போராட்டம்
ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வூதியதாரா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா்.
சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஓய்வூதியதாரா்களின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் நிதி மசோதாவுடன் சோ்த்து ஓய்வூதிய விதிகளில் திருத்தத்தை அமல்படுத்தியது. இதுகுறித்து ஓய்வூதியதாரா் சங்க நிா்வாகிகள் கூறுகையில், ஓய்வுபெற்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு வகையான ஓய்வூதியத்தை நிா்ணயம் செய்யும் அதிகாரத்தை அரசு செயல்படுத்தவுள்ளது. இது கடந்த 1982 ஆம் ஆண்டு டி.எஸ். நகரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிரானது. இதன்மூலம் 8-ஆவது ஊதியக்குழுவின் பலன்கள் ஓய்வூதியா்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதுடன், 8 ஆவது ஊதிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றனா்.
மேலும், ஓய்வூதிய திருத்த சட்டத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகவும், வரும் அக்டோபா் மாதம் 11 ஆம் தேதி தில்லியில் ஓய்வூதியதாரா்கள் பேரணி நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.