முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை, அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும். உள்ளூா் விடுமுறைக்குப் பதிலாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வேலை நாள்களாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.