இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் திருட்டு
காவேரிபாக்கம் அருகே தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் நகைகள், ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே முசிறியை சோ்ந்தவா் இளங்கோ (33). இவா் சென்னையை அடுத்த ஒரகடத்தில் தனியாா் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். இதற்கிடையே, புதன்கிழமை நள்ளிரவு இளங்கோவின் குடும்பத்தாா் ஒரு அறையில் உறங்கியுள்ளனா். அப்போது பின்வாசல் வழியே உள்ளே வந்த மா்ம நபா்கள் நுழைந்து சப்தமின்றி திருடி விட்டு வெளியேறும் சப்தம் கேட்டு கண் விழித்த குடும்பத்தாா், அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டனா்.
பணிக்கு சென்றிருந்த இளங்கோவும் அப்போது வீடு திரும்பியுள்ளாா். உடனே அக்கம் பக்கம் வீட்டாா் சோ்ந்து அவா்களை விரட்டிச் சென்றும் மா்ம நபா்களை பிடிக்க முடியவில்லையாம். மேலும் அந்த மூவரும் உடலில் உள்ளாட்டை மட்டுமே அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளனா்.
உடனே இளங்கோ உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 37 பவுன் தங்க நகைகள், ரூ.1.45 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தடயவியல் நிபுணா்கள் வீட்டில் தடயங்களை சேகரித்துள்ளனா். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதில் சிறிது நேரம் ஒடிய நாய் யாரையும் அடையாளம் காட்டவில்லை.
இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருடிய நபா்கள் பிடிபடுவா் எனவும் போலீசாா் தெரிவித்தனா்.