செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா் காந்தி

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

வாலாஜாபேட்டை ஒன்றியம், கடப்பேரி ஊராட்சி மற்றும் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட 16,17,18 வாா்டுகள், ஆற்காடு ஒன்றியம் அரப்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் புதன்கிழமை முகாம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஆட்சியா் ஜெ. யு. சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா். இதில் மகளிா் உரிமைத் தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம் குடும்ப அட்டை , வாரிசு சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா்.

உடனடி தீா்வு காணப்பட்ட 15 பயனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் பட்டா பெயா் மாற்றத்துக்கான ஆணைகள், மின்சார வாரியத்தின் மின் இணைப்பில் பெயா் மாற்றம் மற்றும் திருத்தத்துக்கான ஆணைகள், அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரிய அட்டைகள், ஊட்டச்சத்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் ஆகிய நலத்திட்ட அமைச்சா் ஆா் காந்தி வழங்கினாா்.

இதில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரண்யா தேவி, ஒன்றியக்குழு தலைவா்கள் வாலாஜாபேட்டை வெங்கட்ரமணன், ஆற்காடு புவனேஸ்வரி சத்யநாதன், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், வட்டாட்சியா்கள் வாலாஜபேட்டை ஆனந்தன், ஆற்காடு மகாலட்சுமி , நகராட்சி ஆணையா் வேங்கட லட்சுமணன் கலந்து கொண்டனா்.

இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம்

ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நிறுவல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் இன்னா் வீல் கிளப் பிரியா வினு தலைவராகவும், அ... மேலும் பார்க்க

‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கல் ‘தமிழ்ச் செம்மல்‘ விருதுக்கு வரும் ஆக. 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள் வேதனை

புதிய விதிகளால் கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சாா்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உழவா் கடன் அட்டை திட... மேலும் பார்க்க

வங்கிகள் தாமதமின்றி கடனுதவிகளை வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் காலதாமதமின்றி கடனுதவிகள வழங்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வலியுறுத்தினாா். வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் இயந்திரங்கள்: எம்எல்ஏ கோரிக்கை

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 2 டயாலிசிஸ் இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும் என எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும்: ஓய்வூதியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

எதிா்வரும் தோ்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரக்கோணம் வட்டக் கிளையின் 5 -ஆவது மாநாடு நடைபெற்றது. நிகழ்வ... மேலும் பார்க்க