``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
பெங்களூா்- தாம்பரம் குளிா்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
பெங்களூா்-தாம்பரம் இடையிலான குளிா்சாதன வசதியுடைய பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அதிநவீன குளிா்சாதன வசதியுடைய பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
பெங்களூா் மற்றும் தாம்பரம் இடையே 3 அரசுப் பேருந்துகளை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தாா். இப்பேருந்துகளில் பயணியா் வசதிக்காக கைப்பேி சாா்ஜா், பயணிகள் பாதுகாப்பு மற்றும் நடத்துநா் வசதிக்ககாவும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள், பயணியா்கள் இறங்கும் இடத்தை நடத்துநா் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்வில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.