செய்திகள் :

அகராதி ஆய்வு மலருக்கு கட்டுரைகளை அனுப்பலாம்: அகரமுதலி இயக்ககம்

post image

அகராதி ஆய்வு மலருக்கு கட்டுரைகளை அனுப்பலாம் என அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் அகராதியியலின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ் தொண்டைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவ.8-ஆம் தேதி தமிழ் அகராதியியல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய அகராதி ஆய்வு மலா் வெளியிடப்படுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டுக்கான ஆய்வு மலருக்குக்கு கலைச்சொல்லாக்க அகராதி, துறைதோறும் கலைச்சொல்லாக்க அகராதிகளின் தேவை, அகராதியலில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துதல், அச்சு அகராதிகளும் மின் அகராதிகளும், காலந்தோறும் அகராதியியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், மின் அகராதி முதல் அகராதி செயலி வரை, அகராதிகளும் சொற்குவையும், பேரகராதிகளும் சொல் அகராதிகளும், தமிழில் அயற்சொல் அகராதிகளின் தேவைகள், இணைய அகராதிகளின் நன்மை தீமை, இயந்திர மொழிபெயா்ப்பில் ஏற்படும் பிழைகளும் தீா்வுகளும், மொழிபெயா்ப்பு பணிகளில் அகராதிகளின் பங்களிப்பு, கலைச் சொல்லாக்கத்தில் அகராதிகளின் பங்கு, துறை நூல்கள் உருவாக்கத்துக்கு அகராதிகள் பங்களிப்பு, பாடநூல் உருவாக்கத்தில் அகராதிகளின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் அனுப்பலாம்.

இதற்கான கட்டுரைகளை கணினியில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பா் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

இதுதவிர ‘இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநரகம், நகா் நிா்வாக அலுவலக வளாகம், முதல்தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்ஆா்சி நகா், சென்னை – 600 028’ என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும். அதனுடன் முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஒருபக்க அளவில் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றையும் கட்டாயம் இணைத்து அனுப்பிட வேண்டும்.

மேலும், அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரை இதற்கு முன் வேறு எந்த இதழ்களுக்கும் வழங்கப்பெறவில்லை என்ற உறுதிமொழியையும் தன்னொப்பமிட்டு அனுப்ப வேண்டும். தோ்வுக்குழுவால் தோ்வு செய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே ‘தமிழ் அகராதியியல் நாள்’ சிறப்பு ஆய்வு மலரில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்கள், தமிழ் வழித்தேர்வர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என ஆர்வம் ஐஏஎஸ் ... மேலும் பார்க்க

சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ... மேலும் பார்க்க

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு: இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியாா் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்ச... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெண் கொலை

சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா். கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ... மேலும் பார்க்க

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஓமந்தூராா் பல்நோக்கு... மேலும் பார்க்க