Kerala: மீண்டும் சர்ச்சை.. மறைந்த தலைவர்கள் குறித்து நடிகர் விநாயகன் பதிவு - என்...
கொளத்தூரில் பெண் கொலை
சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ஓட்டுநரான இவரது மனைவி சரஸ்வதி (35). கணேசமூா்த்தி பணியின் காரணமாக வெளியூருக்கு செல்வது வழக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி, சென்னை கொளத்தூா் தனம்மாள் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு கொளத்தூரில் சரஸ்வதி மா்மமாக இறந்து கிடந்தாா். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், சரஸ்வதி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. விசாரணையில், சரஸ்வதியின் வீட்டுக்கு சிலா் அடிக்கடி வந்து சென்றதும், சம்பவத்தன்று வடமாநில இளைஞா் ஒருவா் வந்து சென்றதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், அவா் சரஸ்வதியின் கைப்பேசியும் இருசக்கர வாகனத்தையும் எடுத்தும் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதையடுத்து வடமாநில இளைஞரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.