அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி
முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1), கணினி பயிற்றுநா் (கிரேடு-1) தோ்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. போட்டித் தோ்வு செப்.28-ஆம் தேதி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதே தேதியில் (செப்டம்பா் 28) டிஎன்பிஎஸ்சி குருப்-2 தோ்வு நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.