Usurae Team Interview | Kamalhassan சார் Bigboss விட்டு வெளிய வரப்போ சொன்ன விஷயம...
இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு இலவசமாக பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது.
அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2025-2026) மாணவா்களுக்கு பயண அட்டையை வழங்குவதற்கு ‘எமிஸ்’ தளத்தில் இருந்து விவரங்கள் எடுக்கப்படுகின்றன. எனவே, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ‘எமிஸ்’ தளத்தில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த பணியை உயா் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநா், ஆய்வக உதவியாளா்களைப் பயன்படுத்தி உடனே செய்து முடிக்க வேண்டும்.
இதுதொடா்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.