ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது
தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை வழங்கினாா்.
தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் 1981-ஆம் ஆண்டு முதல் அமா் சேவா சங்கம் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு விபத்துகளால் ஏற்படும் முதுகெலும்பு காயம் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான சிறப்பு பராமரிப்பு மையம் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
நூற்றுக்கணக்கானோா் தொடா்ந்து பயன்பெற்று வரும் இந்த மையத்தை மேலும் விரிவுபடுத்த நிதியுதவி அளிக்குமாறு, அமா் சேவா சங்கம் சென்னை துறைமுகத்தை அணுகியது. இதையடுத்து துறைமுக அதிகாரிகள் ஆய்வு நடத்தி பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 5 லட்சம் வழங்க ஒப்புதல் அளித்தனா். இதற்கான காசோலையை சங்கத்தின் செயலா் எஸ்.சங்கரராமனிடம் சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், துறைமுகக் கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன், செயலா் இந்திரனில் ஹிஜிரா, போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி, துணைச் செயலா் தாரா சுா்கிதின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.