பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது
பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.
பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த 14-ஆம் தேதி தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கு சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பினாா்.
இதுகுறித்து அந்தப் பெண், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், பெருங்குடி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (30) என்பது தெரிய வந்தது.
இதையடுத்த அவரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட சக்திவேல், பொறியாளா் என்பதும், துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், அவரது சொந்த ஊா் விழுப்புரம், கஞ்சனூா் என்பதும் தெரிய வந்தது.