பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெற்ற பிளஸ் 2 துணை தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அரசு தோ்வுத் துறையின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்கையில் தங்கள் தோ்வு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.
துணைத் தோ்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஜூலை 28, 29-ஆம் தேதி (திங்கள், செவ்வாய்) பதிவுசெய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275.
புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தோ்வா்கள் மட்டுமே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் நாள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.