செய்திகள் :

குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு

post image

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்கள், தமிழ் வழித்தேர்வர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அகாதெமி நிறுவனர் மு.சிபிகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 645 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வினை செப்.28-ஆம் தேதி நடத்தவுள்ளது.

இந்த நிலையில் இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளுக்காக வழங்கப்படும் 6 மாத காலப்பயிற்சியில் தேவையான அடிப்படைப் பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படும்.

வாரந்தோறும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வும், பிரத்யேக வகுப்புகளும் வெற்றியாளர்களின் வழிகாட்டுதல் சந்திப்பும் இந்தப் பயிற்சியில் அடங்கும்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், அகாதெமியின் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலும் கட்டணச் சலுகையோடு பயிற்சிக்கான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எனவே, குரூப் 2, 2ஏ தேர்வுக்குத் தயாராகும் 27 வயதுக்குள்பட்ட தகுதியும் விருப்பமும் உள்ள குறிப்பாக பெண் தேர்வர்கள் மற்றும் தமிழ் வழித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகல்களை இணைத்து அகாதெமிக்கு 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகர்,சென்னை என்ற முகவரியில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் அல்லது aarvamiasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 74488 14441, 91504 66341 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க