செய்திகள் :

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 82,726.64 புள்ளிகளாகவும், நிஃப்டி 25,219.90 புள்ளிகளுடன் நிறைவு!

post image

மும்பை: ஜப்பான் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்தும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கைத் தொடர்ந்து, இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 539.83 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நிஃப்டி 25,219.90 புள்ளிகளாக நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 599.62 புள்ளிகள் உயர்ந்து 82,786.43 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 539.83 புள்ளிகள் உயர்ந்து 82,726.64 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 159 புள்ளிகள் உயர்ந்து 25,219.90 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் இந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை சரிந்தன.

நிஃப்டி-யில் டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், அப்பல்லோ மருத்துவமனைகள், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் டாடா கன்ஸ்யூமர், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிந்தன.

துறைகளில் இன்று ரியல் எஸ்டேட் குறியீடு 2.6 சதவிகிதமும், எஃப்எம்சிஜி குறியீடு 0.5 சதவிகிதம் சரிந்தது. ஆட்டோ, உலோகம், எண்ணெய் & எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், மருந்து, தனியார் வங்கி, பொதுத்துறை வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனம் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை உயர்ந்து முடிவடைந்தன.

பேடிஎம் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்த நிலையில் பலவீனமான முதல் காலாண்டு முடிவுகளை அடுத்து கோல்கேட் பாமோலிவ் பங்குகள் இன்று 52 வார குறைந்த அளவை எட்டியது.

வலுவான Q1 காலாண்டு முடிவுகளை அடுத்து டிக்சன் டெக்னாலஜிஸ் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்தன. லாப வளர்ச்சியில் இந்திய ரயில்வே நிதி நிறுவனம் லிமிடெட் பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.

தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட அட்காக் இங்கிராம் ஹோல்டிங்ஸ் கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து நாட்கோ பார்மாவின் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்தன. வலுவான காலாண்டு வருவாய் காரணமாக பஞ்சாப் தேசிய வங்கி பங்குகள் 8 சதவிகிதம் அதிகரித்தது.

ரூ.175 கோடி மதிப்புள்ள ஆர்டர் கைப்பற்றியதை அடுத்து சூர்யா ரோஷ்னி பங்குகள் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் உயர்ந்தன.

ஜேஎம் ஃபைனான்சியல், கிரெடிட் அக்சஸ் கிராமீன், எல்டி ஃபைனான்ஸ், பேடிஎம், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஆனந்த் ரதி, கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனம் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ராம்கோ சிமென்ட்ஸ், குஜராத் மினரல், விஷால் மெகா மார்ட் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.

இன்று ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.3,548.92 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,239.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.45 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 68.29 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: 15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!

Benchmark Sensex jumped nearly 540 points while Nifty closed above the 25,200 level on Wednesday following a positive trend in Asian markets after Japan secured a trade deal with the US.

கார்வார் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

மும்பை: கர்நாடகாவை சேர்ந்த தி கார்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால், அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.இதன் விளை... மேலும் பார்க்க

தங்கத்தை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி!

புதுதில்லி: வர்த்தகர்களிடமிருந்து வலுவான தேவை மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக தலைநகர் தில்லியில் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது.வெள்ளி விலை இன்று கிலோ ஒன்றுக்கு ரூ.4,000 அதிகர... மேலும் பார்க்க

நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் லைட் எனும் கையடக்கக் கணினி ரூ.15 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. இந்நிறுவனத்தின் வேறு எந்த கையடக்கக் கணினியிலும் இல்லாத வகையில் அதிக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த விலை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.86.41 ஆக நிறைவு!

மும்பை: வலுவான டாலர் மதிப்பு மற்றும் அந்நிய நிதி வெளியேறியதற்கு மத்தியில், தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகவே இருந்து. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ... மேலும் பார்க்க

அதிக பேட்டரி திறனுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ரியல்மீ நிறுவனம் நர்ஸோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று விலை குறைவாக 4ஜி ஸ்மார்ட... மேலும் பார்க்க

டிராக் டார்க் கண்ட்ரோல் வசதியுடன் ஆர்டிஆர் 310!

அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஆர்டிஆர் 310 பைக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட மாடல் தற்போ... மேலும் பார்க்க