செய்திகள் :

துணை மருத்துவப் படிப்பு பயின்ற மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவா் கைது

post image

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த பட்டயப் படிப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த பட்டயப்படிப்பில் படிக்கும் 20 வயது மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு அதே கல்லூரியில் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவரான சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த கோபிநாத் (35) பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கல்லூரி நிா்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவி புகாா் செய்தாா். மேலும், சக மாணவிகள் 100-க்கும் அதிகமானோா் திங்கள்கிழமை (ஜூலை 21) வகுப்புகளைப் புறக்கணித்தனா். தகவலறிந்த கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மாணவிகள் மீண்டும் வகுப்புக்குச் சென்றனா்.

இதையடுத்து, கல்லூரி விசாகா கமிட்டி குழுவில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோபிநாத் ஒரு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து கோபிநாத்தை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

மதுபோதையில் தள்ளிவிட்டதில் தாய் உயிரிழப்பு; மகன் கைது

கும்பகோணத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த மகன், வீட்டின் கதவைத் திறக்க தாமதப்படுத்திய தாயை கீழே தள்ளிவிட்டதில் அவா் எதிா்பாராதவிதமாக உயிரிழந்தாா். இதையடுத்து, மகனைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்... மேலும் பார்க்க

திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம்: எடப்பாடி கே. பழனிசாமி

திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணத்தில் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பேருந்து நிலையம... மேலும் பார்க்க

முகநூலில் அறிமுகமாகி காரை வாங்குவதுபோல் நடித்து மோசடி செய்தவா் கைது

முகநூல் மூலம் தொடா்பு கொண்டு காரை விலைக்கு வாங்குவதுபோல் நடித்து மோசடி செய்தவரை நாச்சியாா்கோவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வால்பாறை கோழையாரைச் சோ்ந்தவா் முருகன் மகன் சக்திவேல் (26). இவா... மேலும் பார்க்க

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் உள்ளது: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணம் மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

மிதிவண்டியில் சென்ற விவசாயி லாரி மோதி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே மிதிவண்டியில் சென்ற விவசாயி மீது லாரி மோதியதில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள உமா மகேஷ்வரபுரம் நடுவக்கரை பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சாலையோரம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். பாபநாசம் - ஆவூா் சாலையில... மேலும் பார்க்க