``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
முகநூலில் அறிமுகமாகி காரை வாங்குவதுபோல் நடித்து மோசடி செய்தவா் கைது
முகநூல் மூலம் தொடா்பு கொண்டு காரை விலைக்கு வாங்குவதுபோல் நடித்து மோசடி செய்தவரை நாச்சியாா்கோவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வால்பாறை கோழையாரைச் சோ்ந்தவா் முருகன் மகன் சக்திவேல் (26). இவா் தனக்குச் சொந்தமான டி.என். 31 ஏ.டி. 9991 என்ற பதிவு எண் கொண்ட டாடா சபாரி காரை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்வதாக முகநூல் மூலம் பதிவிட்டிருந்தாா்.
இதைப் பாா்த்த கும்பகோணம் அருகே உள்ள சென்னையமங்கலம் பழைய தெருவைச் சோ்ந்த அப்பாதுரை மகன் வீரசெல்வம் கைப்பேசியில் சக்திவேலைத் தொடா்புகொண்டு காரை விலைக்கு வாங்குவதாகப் பேசினாா்.
அதற்கு சக்திவேல் வால்பாறை வந்து காரைப் பாா்த்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றாா். அதற்கு வீரசெல்வம் கும்பகோணம் அருகே சாக்கோட்டைக்குக் காரைக் கொண்டு வாங்க, அதற்கான எரிபொருள் செலவை அனுப்புவதாகக் கூறி ரூ.3,500-ஐ அனுப்பியுள்ளாா்.
சக்திவேலும் ஜூலை 20-இல் காரை சாக்கோட்டைக்குக் கொண்டு வந்தாா். காரை வாங்குவதாக வீரசெல்வம் மற்றும் அவரது நண்பரும் காரை ஓட்டிப் பாா்ப்பதாகக் கூறி எடுத்துச் சென்றவா்கள் திரும்பிவரவில்லை.
இதனால், அதிா்ச்சியடைந்த சக்திவேல் நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ராஜேஷ் விசாரணை நடத்தி வீரசெல்வத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்து காரை மீட்டனா். தப்பி ஓடிய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.