சாலையோரம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாபநாசம் - ஆவூா் சாலையில் பாபநாசத்திலிருந்து கோபுராஜபுரம் செல்லும் வழியில் சாலையோரத்தில் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூராக உள்ளன.
இதைத்தொடா்ந்து உள்ள உ.வே. சாமிநாதைய்யா் வசித்த உத்தமதானபுரம், சாலபோகம், கோட்டைச் சேரி, மூலாழ்வாஞ்சேரி, மணக்கோடு, நல்லூா், கிளியூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
தஞ்சாவூா் - திருவாரூா் மாவட்டங்களை இணைக்கின்ற இந்த கோபுராஜபுரத்தில் உள்ள சாலையோரங்களில் வளா்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதால் அவைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.