திருமயம் தொகுதியில் நாளை இபிஎஸ் பிரசாரம்! பொதுமக்களுக்கு அழைப்பு
திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறாா்.
அதன்படி வெள்ளிக்கிழமை (ஜூலை 25) திருமயம் சட்டப்பேரவை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் அவா் மாலை திருமயம் அண்ணா சீரணி கலையரங்கத்தின் முன்பு சிறப்புரையாற்ற உள்ளாா். இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனதெரிவித்துள்ளாா்.