முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
புதுகை அருகே சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் சகோதரா்கள் இருவா் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் காமராஜ்நகரைச் சோ்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (35), காா்த்திக் (29). இவா்கள் இருவரையும் வியாழக்கிழமை இரவு ஒரு கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடி விட்டது.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினாா்.
ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா். அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.