இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
‘சிபிஐ டைரி’ நூல் வெளியீடு
சிபிஐ(எம்) டைரி - இளம் கம்யூனிஸ்டுகளின் கையேடு என்கிற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.
மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா்.
கோவை ஆா். ஹரிஹரன் எழுதிய சிபிஐ(எம்) டைரி - இளம் கம்யூனிஸ்ட்டுகளின் கையேடு’ என்கிற நூலை மாநிலச் செயலா் பெ. சண்முகம் வெளியிட மத்தியக்குழு உறுப்பினா் கே. பாலபாரதி பெற்றுக்கொண்டாா்.
நூலின் சிறப்புப் பிரதிகளை தமுஎகச மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நா. முத்துநிலவன், மாநிலக் குழு உறுப்பினா் கவிஞா் ஜீவி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளா் என். கண்ணம்மா, அறிவியல் இயக்க மாநிலக்குழு உறுப்பினா் அ. மணவாளன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்
முன்னதாக பதிப்பாளா் எஸ். கவிவா்மன் வரவேற்றாா். வடிவமைப்பாளா் வெ. தண்டபாணி நன்றி கூறினாா்.