இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
கீரனூா் சாா்-பதிவாளரகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ. 84 ஆயிரம் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ. 84 ஆயிரத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளா்கள் பீட்டா், ஜவஹா் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை மாலை சோதனை நடத்தினா்.
அப்போது பத்திரப் பதிவுக்கு வருவோரிடம் மகேஷ் என்ற பணியாளா் கூடுதல் தொகை வசூலித்து தெரியவந்தது. இதையடுத்து, வாசு மற்றும் மகேஷ் ஆகியோரிடம் இருந்து ரூ.84 ஆயிரத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.