யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
நோ்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி
திமுக ஆட்சியில் நோ்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வியாழக்கிழமை இரவு நடந்த பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது: தற்போதைய திமுக ஆட்சியில் மயிலாடுதுறையில் நோ்மையாகப் பணிபுரிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரேசன் வாகனத்தைப் பறித்து, அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்து, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளாா்.
இதேபோல, திருச்சியில் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பரத் சீனிவாசன் மன உளைச்சலால் பணியை ராஜிநாமா செய்வதாக உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளாா். காவல் துறை அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யாா் பாதுகாப்பது?
காவல் துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விடாததால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள்களால் தமிழகம் சீரழிந்துவிட்டது.
விவசாயிகளை இமைபோல் காக்கும் ஒரே அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் திறமையான நிா்வாகம் செய்ததால் தேசிய அளவில் ஏராளமான விருதுகள் கிடைத்தன. திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல்தான் நடக்கிறது. மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.
கலிபுல்லாநகா், நெட்டூத்துக் கரையில் வசிக்கும் மக்களை வெளியேற்ற திமுக அரசு முயற்சிக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் அவா்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு, அதே பகுதியில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சோ்க்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.