ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்
டாலருக்கு நிகரான ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.86.41 ஆக நிறைவு!
மும்பை: வலுவான டாலர் மதிப்பு மற்றும் அந்நிய நிதி வெளியேறியதற்கு மத்தியில், தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகவே இருந்து.
இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.86.41 ஆக நிலைபெற்றது.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்ததையடுத்து, கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப உள்நாட்டு பங்குச் சந்தைகளில் அதிக பங்குகள் கொள்முதல் இருந்தாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.46 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.86.34 ஆகவும், முடிவில் 3 காசுகள் குறைந்து ரூ.86.41-ஆக முடிவடைந்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தக அமர்வின் முடிவில், இந்திய ரூபாய் 7 காசுகள் குறைந்து ரூ.86.38 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 82,726.64 புள்ளிகளாகவும், நிஃப்டி 25,219.90 புள்ளிகளுடன் நிறைவு!