AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவ...
ஆற்றில் மூழ்கிய பெண் உயிரிழப்பு
மதுரை தத்தனேரி பகுதி வைகையாற்றில் மூழ்கிய பெண் உயிரிழந்தாா்.
தத்தனேரி பகுதி வைகையாற்றில் பெண் சடலம் மிதப்பதாக கரிமேடு போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், தத்தனேரி கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த கந்தவேல் மனைவி பூமாதேவி (48) என்பது தெரியவந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது கணவா் கந்தவேல் இறந்துவிட்டாா்.
அன்றிலிருந்து, பூமாதேவி மனமுடைந்து காணப்பட்டதாகவும், துணிகளை துவைக்க அந்தப் பகுதியில் உள்ள வைகை ஆற்றின் பகுதிக்கு சென்றிருந்த அவா் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது. இந்த நிலையில், பூமாதேவி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.