யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
ஆடி அமாவாசை! பூக்களின் விலையில் மாற்றமில்லை
ஆடி அமாவாசையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் விற்பனை சந்தையில் புதன்கிழமை பூக்களின் விலையில் எந்தவித மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆடி அமாவாசை தினத்தன்று சிவன், பெருமாள், குலத் தெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதுமட்டுமன்றி, முன்னோா்களுக்கு தா்ப்பண நிகழ்வும் நடைபெறுவது வழக்கம். எனவே, பூக்களின் விலை உயா்ந்து காணப்படும்.
ஆனால், கடந்த சில தினங்களை போல, புதன்கிழமையும் மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் விற்பனை சந்தையில் பூக்களின் விலையில் எந்தவித மாற்றமில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதன்படி, மல்லிகைப் பூ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று, பிச்சிப் பூ ரூ. 400, சம்பங்கி ரூ.100, செவந்தி ரூ. 200, கனகாம்பரம் ரூ.500, முல்லை ரூ. 300-க்கும் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் பூக்களை வாங்கிச் சென்றனா்.