தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
அதிக பேட்டரி திறனுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!
ரியல்மீ நிறுவனம் நர்ஸோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று விலை குறைவாக 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
கவரும் வகையிலான வலுவான புற அமைப்பு மற்றும் அதீத பேட்டரி திறன் ஆகியவை நர்ஸோ 80 லைட் 4ஜியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரியல்மீ நர்ஸோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனானது, 6.74 அங்குல எச்.டி. திரை கொண்டது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில் 180Hz திறன் கொண்டது.
ராணுவ தரத்திலான அதிர்வு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதால், இந்த ஸ்மார்போன் தவறுதலான விபத்துகளில் கீழே விழும்போது சேதமடையும் வாய்ப்பு குறைவு.
தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்காக IP54 திறன் வழங்கப்பட்டுள்ளது.
4ஜியில் மற்ற ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 6300mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ஒருமுறை முழுவதும் சார்ஜ் செய்தால், இரண்டு நாள்களுக்கு பேட்டரி நீடித்திருக்கும் என ரியல்மீ கூறுகிறது.
பின்புறம் 13MP கேமராவுடன் OV13B10 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக 5MP வழங்கப்பட்டுள்ளது.
இரு வகை நினைவக வேறுபாடுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.
4GB உள் நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 7,299
6GB உள் நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 8,299.
இதையும் படிக்க |ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!