கஞ்சா விற்பனை: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது
சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்ாக சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
அயனாவரம் சோமசுந்தரம் தெருவில் இருவா் கஞ்சா விற்பதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசியத் தவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் புதன்கிழமை ரகசியமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனா். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும், இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த நரேஷ் (32), விமல் (24) என்பதும், நரேஷ் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒரு கல்லூரியில் சட்ட பட்டப் படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.